ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டம் கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், வென்ற ராஜஸ்தான் அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷிகர் தவான் இருவரும் அபாரமாக ஆடி வலுவான அடித்தளம் அமைத்தனர். இந்த ஜோடி 90 ரன் சேர்த்த நிலையில் பிரிந்தது. பிரப்சிம்ரன் சிங் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பனுகா ராஜபக்சே ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் காயமடைந்து வெளியேறினார்.
.@ashwinravi99 with a beauty 🔥🔥
— IndianPremierLeague (@IPL) April 5, 2023
Relive his magical delivery to dismiss Sikandar Raza #TATAIPL | #RRvPBKS pic.twitter.com/pcwVDt4JKc
இதையடுத்து ஷிகர் தவானுடன் ஜிதேஷ் சர்மா இணைய, மீண்டும் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. ஜிதேஷ் 27 ரன்கள் சேர்த்த நிலையில், விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த சிக்கந்தர் ரசா ஒரு ரன்னிலும், ஷாருக் கான் 11 ரன்னிலும் அவுட் ஆக, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது.
ஷிகர் தவான் 56 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 86 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட் கைப்பற்றினார். அஷ்வின், சாகல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. இதில், அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஷிம்ரான் ஹெட்மியர் 36 ரன்கள், துருவ் ஜூரல் 32 ரன்களும், தேவ்தத் படிக்கல் 21 ரன்கள், ரியான் பராக் 20, ஜோஸ் பட்லர் 19 ரன்கள், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 11 ரன்களும் எடுத்தனர்.
ICYMI – Nathan Ellis grabs a stunner to get the in form batter, Jos Buttler.
— IndianPremierLeague (@IPL) April 5, 2023
Watch it here 👇👇#TATAIPL #RRvPBKS pic.twitter.com/rbt0CJRyLe
இதில், ஷிம்ரான் ஹெட்மியர் மற்றும் துருவ் ஆட்டமிழக்கவில்லை. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
இதை படிக்க :- ஐபிஎல் 2023: சாய் சுதர்ஷன் அபாரம்- 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி..!