16வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரரும் கேப்டனுமான டேவிட் வார்னர் தாக்குப்பிடித்து 37 ரன்கள் எடுத்தார். சர்ப்ராஸ் கான் 30 ரன்னும், அபிஷேக் பொரெல் 20 ரன்னும் எடுத்தனர்.
Two in Two by Alzarri Joseph 🔥🔥
— IndianPremierLeague (@IPL) April 4, 2023
Watch them here 👇👇
Live – https://t.co/9Zy9HcuWS6 #TATAIPL #DCvGT #IPL2023 pic.twitter.com/ocfJEm9uuQ
கடைசி கட்டத்தில் அக்சர் படேல் பொறுப்புடன் ஆடி 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் ஷமி, ரஷீத் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. இதில், சாய் சுதர்ஷன் அதிகபட்சமாக 48 பந்துக்கு 62 ரன்கள் குவித்தார். தொடர்ந்து விஜய் சங்கர் 29 ரன்களும், டேவிட் மில்லர் 31 ரன்களும், சாஹா மற்றும் ஷூப்மன் கில் தலா 14 ரன்களும், ஹர்திக் பாண்டியா 5 ரன்னும் எடுத்தனர்.
ICYMI – @DavidMillerSA12 takes on Mukesh Kumar 🔥🔥🔥#TATAIPL #DCvGT pic.twitter.com/ilEDdItqz3
— IndianPremierLeague (@IPL) April 4, 2023
போட்டியின் இறுதியில் 18.1 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 163 ரன்களை எடுத்து குஜராத் அணி அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.
இதை படிக்க :- ஐபிஎல் 2023: லக்னோவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்தது சென்னை..!


