மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 18.5 ஓவரில் 258 ஓட்டங்கள் இலக்கை எட்டி இமாலய சாதனை படைத்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்தது.
சிக்ஸர் மழையை தொடங்கி வைத்த மேற்கிந்திய தீவுகள்
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 258 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக சார்லஸ் 46 பந்துகளில் 118 ஓட்டங்கள் விளாசினார் . மேயர்ஸ் 27 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணியில் டி காக் மற்றும் ஹென்ரிக்ஸ் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினர். சதம் விளாசிய டி காக் 44 பந்துகளில் 100 ஓட்டங்களும், ஹென்ரிக்ஸ் 28 பந்துகளில் 68 ஓட்டங்களும் விளாசினர்.

புதிய சாதனை
இறுதி கட்டத்தில் கேப்டன் மார்க்ரம் அதிரடியாக 38 ஓட்டங்கள் விளாச, 18.5 ஓவரிலேயே தென் ஆப்பிரிக்கா 259 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரு அணிகளும் சேர்த்து 517 ஓட்டங்கள் எடுத்துள்ளன. டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி செய்த மிகப்பெரிய சேஸிங் இதுவாகும்.

சிக்ஸர் மழை பொழிவு
மேற்கிந்திய தீவுகள் சார்பாக
சார்லஸ் 11 சிக்ஸர்
மேயர்ஸ் 4 சிக்ஸர்
பவல் 2 சிக்ஸர்
ஷேபர்ட் 4 சிக்ஸர்
ஸ்மித் 1 சிக்ஸர் என எல்லாமாக 22 சிக்ஸர்களை விளாசி இருந்தனர்
தென் ஆப்பிரிக்கா சார்பாக
டி காக் 8 சிக்ஸர்
ஹென்ரிக்ஸ் 2 சிக்ஸர்
ரோசசௌவ் 2 சிக்ஸர்
மார்க்ரம் 1 சிக்ஸர் என எல்லாமாக 13 சிக்ஸர்களை விளாசி இருந்தனர்
இதை படிக்க :- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை சூடியது மும்பை இந்தியன்ஸ் அணி..!