Breaking News

சேப்பாக்கம் மைதானத்தின் ரசிகர்கள் இருக்கைகளுக்கு பெயிண்ட் அடிக்கும் சிஸ்கே கேப்டன் டோனி..! வைரலாகும் வீடியோ

ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

அடுத்த மாதம் 3-ந் தேதி லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

சென்னை ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிஎஸ்கே அணியின் நிர்வாகம் சென்னை அணி வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவை அவ்வபோது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கமாக கொண்டுள்ளது. முக்கியமாக தல டோனியின் வீடியோவை சென்னை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் அமரும் இருக்கைகளுக்கு டோனி பெயிண்ட் அடிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதை படிக்க :-நம்ம ஊரு சென்னைக்கு விசில் போடுங்க: பிராவோவுக்கு விசில் அடிக்க கற்றுக்கொடுத்த டோனி..! வைரல் வீடியோ

இதற்கு முன்பு பிராவோவுக்கு டோனி விசில் அடிக்க கற்றுக் கொடுத்த வீடியோ வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

இதை படிக்க :- மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் இரு அணிகளும் சிக்ஸர் மழை பொழிவு..! இமாலய ஓட்டங்கள் சேஸிங்

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *