Breaking News

செய்த ஷிகர் தவானுக்கு எச்ஐவி பரிசோதனை: அதுவும் 15 வயதில் மேட்கொண்டனர்..? காரணம் இது தான்..!

ஐபிஎல் தொடர் வரும் 31-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை-குஜராத் அணிகள் மோதுகின்றன. இதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது தீவிரமாக தயாரகி வருகின்றனர்.

இந்த வருட ஐபிஎல் தொடருக்கு பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார். இந்நிலையில் 14-15 வயதில் எச்ஐவி பரிசோதனை மேற்கொண்டதாக ஷிகர் தவான் கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- எனக்கு 14-15 வயது இருக்கும் போது, மணாலிக்குச் சென்று, என் குடும்பத்தாருக்குத் தெரிவிக்காமல் முதுகில் பச்சை குத்தியிருந்தேன். நான் அதை சிறிது காலம் மறைத்து வைத்திருந்தேன்.

சுமார் 3-4 மாதங்களுக்கு பின்னர் என் தந்தைக்கு நான் பச்சை குத்தியது தெரிந்துவிட்டது. அவர் என்னை அடித்தார்.
டாட்டூவைக் குத்திய பிறகு நான் கொஞ்சம் பயந்தேன். எனக்கு டாட்டு குத்திய ஊசியை வைத்து எத்தனை பேருக்கு குத்தப்பட்டது என்ற தகவல் எனக்கு தெரியவில்லை.

எனவே நான் எச்ஐவி பரிசோதனை மேற்கொண்டேன். அது இன்று வரை எதிர்மறையாக (நெகட்டிவ்) உள்ளது. நான் குத்திய முதல் டாட்டு ஸ்கார்பியோ (தேள்) என்னுடைய முதுகில் குத்தினேன். ஏனென்றால் அந்த நேரத்தில், அது என் எண்ணமாக இருந்தது.

பிறகு நான் அதை ஒரு டிசைன் செய்தேன். என் கையிலும் சிவபெருமான் பச்சை குத்தினேன். அர்ஜூனன் பச்சையும் குத்தி உள்ளேன். ஏனென்றால் அவர் வில் எய்வதில் மிகச்சிறந்தவர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை படிக்க :- கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் சார்லஸ்- குறைந்த பந்துகளில் சதம் அடித்து அசத்தல்..!

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *