Breaking News

அது ஒன்னும் எளிதான காரியம் அல்ல..! தெண்டுல்கரின் 100 சதத்தை கோலி முறியடிப்பது மிகவும் கடினமானது -ரவிசாஸ்திரி

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான வீராட் கோலி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்தார். அவர் கிட்டத்தட்ட 3½ ஆண்டுகளுக்கு பிறகு செஞ்சுரி அடித்தார்.

வீராட் கோலி சர்வதேச போட்டிகளில் மொத்தம் 75 சதங்கள் (டெஸ்ட் 28 + ஒருநாள் போட்டி 46 + 20 ஓவர் 1) அடித்துள்ளார். தெண்டுல்கரின் 100 சதங்கள் எடுத்த சாதனையை கோலி முறியடிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்து இருந்தார்.

விராட் கோலி 110 சதங்கள் அடித்து சச்சின் சாதனையை முறியடிப்பார் – முன்னாள் பாகிஸ்தான் வீரர் நம்பிக்கை..!

இந்நிலையில் தெண்டுல்கரின் 100 சதம் சாதனையை வீராட்கோலி முறியடிப்பது எளிதல்ல என்று முன்னாள் கேப்டனும், இந்திய அணி முன்னாள் பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி தெரிவித்து உள்ளார்.

ரவிசாஸ்திரி கூறுவது

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- சர்வதேச அளவில் 100 சதங்கள் அடித்தவர் ஒருவரே என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். எனவே அதை யாராவது கடக்க முடியும் என்று சொன்னால் அது பெரிய விஷயம். வீராட்கோலி இன்னும் 5 ஆண்டுகள் வரை விளையாட முடியும். அவர் சிறப்பாக விளையாடினாலும் 100 சதங்களை எடுப்பது என்பது கடினமானதே. இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

இதை படிக்க :-நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் 76 ரன்னுக்கு ஆல்அவுட்டாகி மோசமான சாதனையை பதிவு செய்தது இலங்கை..! இது இரண்டாவது முறை..?

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *