இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வருகிற 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. முதல் போட்டியில் சென்னை- குஜராத் அணிகள் மோத உள்ளன.

அதேபோல சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 27 ஆம் தேதி தொடங்கும் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்து உள்ளது.
அதன்படி, மார்ச் 27ம் தேதி காலை 9.30 மணி முதல் ஆன்லைன் மற்றும் நேரடியாக டிக்கெட் விற்பனை நடைபெறும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்து உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை டிக்கெட்டின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதை படிக்க :- மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வெல்ல போவது யார்? மும்பை- டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை..!