மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. உபி வாரியர்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய மும்பை அணி, 127 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் 35 ரன்களும், இஸ்ஸி வோங் 32 ரன்களும் சேர்த்தனர்.
ICYMI!
— Women’s Premier League (WPL) (@wplt20) March 18, 2023
When @Deepti_Sharma06 got the #MI skipper out!
Follow the match ▶️ https://t.co/6bZ3042C4S #TATAWPL | #MIvUPW pic.twitter.com/fsX0IzxDwj
இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணி, 3 பந்துகள் மீதமிருந்த நிலையில், இலக்கை எட்டியது. தஹ்லியா மெக்ராத் 38 ரன்களும், கிரேஸ் ஹாரிஸ் 39 ரன்களும் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், 3வது பந்தில் சோபி எக்லெஸ்டோன் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். உ.பி.வாரியர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை 129 ரன்கள் சேர்த்ததால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணியின் தொடர் வெற்றிக்கு உ.பி. வாரியர்ஸ் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதை படிக்க :- பும்ரா இல்லை என்றாலும் இந்த முறை ஐபிஎல் கோப்பை மும்பை அணிக்கு தான் – சுனில் கவாஸ்கர்..!