
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 68 ரன்கள் அடித்தார். ஆஷ்லி கார்ட்னர் 41 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. துவக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, சோபி டிவைன் இருவரும் குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன் குவித்தனர். அதிரடியாக ஆடிய மந்தனா 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.
BOOM 💥
— Women's Premier League (WPL) (@wplt20) March 18, 2023
6️⃣4️⃣4️⃣6️⃣4️⃣@RCBTweets have crossed FIFTY in the fourth over 🔥🔥
Follow the match ▶️ https://t.co/uTxwwRnRxl#TATAWPL | #RCBvGG pic.twitter.com/8B18NN4TRI
சிக்சர் மழை பொழிந்த சோபி டிவைன்
மறுமுனையில் சிக்சர் மழை பொழிந்த சோபி டிவைன் 36 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 99 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மகளிர் பிரீமியர் லீக்கில் அவர் ஒரு ரன்னில் முதல் சதத்தை தவறவிட்டார்.
Sophie Devine scored an incredible 99 off just 36 deliveries in a successful run-chase for @RCBTweets and bagged the Player of the Match award 👏👏#RCB registered their second win in a row 👌🏻
— Women's Premier League (WPL) (@wplt20) March 18, 2023
Scorecard ▶️ https://t.co/6bZ3042C4S #TATAWPL | #RCBvGG pic.twitter.com/ytfyFsd5nV
அதன்பின் எலிஸ் பெர்ரி, ஹெதர் நைட் இருவரும் இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். 27 பந்துகள் மீதமிருந்த நிலையில், பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டியது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எலிஸ் பெர்ரி 19 ரன்களுடனும், ஹெதர் நைட் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதை படிக்க ;- மகளிர் பிரீமியர் லீக்: தொடர் வெற்றியால் திளைத்த மும்பை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது உ.பி. வாரியர்ஸ் அணி..!