Breaking News

ரிஷப் பண்ட்டை நேரில் சந்தித்தார் முன்னாள் இந்திய கிரிக்கட் ஜாம்பவான் யுவராஜ் சிங்..! இந்த சாம்பியன் மீண்டும் எழப் போகிறார்..,

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். அவர் ஓட்டிச் சென்ற கார் சாலையின் தடுப்பில் மோதி தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார்.

இதனை தொடர்ந்து பல அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டு தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல்நிலை முன்னேறி வந்தாலும், கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு ஆண்டு ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ரிஷப் பண்ட்டை இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான யுவராஜ் சிங், நேரில் சந்தித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் தன்னுடைய டுவீட்டரில், “இந்த சாம்பியன் மீண்டும் எழப் போகிறார். ஒரு பையன் எப்போதும் நேர்மறையாகவும் வேடிக்கையாகவும் இருப்பான். உங்களுக்கு அதிக சக்தி” ..
என்று பதிவிட்டுள்ளார்.

இதை படிக்க :- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி..!

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *