Breaking News

விஜயின் பீஸ்ட் பட பாடலுக்கு நடனமாடிய டோனி- வைரலாகும் வீடியோ..!

16-வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தீவிரமாக வலை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

வரும் 31-ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதன் காரணமாக அந்தந்த அணிகள், அணிகளின் ஹோம் மைதானங்களில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

பீஸ்ட் பட பாடலுக்கு டோனி நடனம்

அந்த வகையில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்-ன் பீஸ்ட் பட பாடலுக்கு டோனி உள்பட 4 வீரர்கள் நடனமாடுவது போல உள்ள வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அதில் டோனி கித்தார் வாசிப்பது போன்றும் அருகில் ருதுராஜ், சிவன் துபே, தீபக் சாஹர் ஆகியோர் நடனமாடுவது போன்று இருந்தது.

கடந்த 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை படிக்க :- இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் தொடர்: ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றம்..!

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *