Breaking News

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி இறுதி ஓவரில் திரிலான வெற்றி..!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக எலிஸ் பெர்ரி 67 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தார்.

ஆரம்பமே தடுமாற்றம்

இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் மெக் லேனிங் 15 ரன்களில் வெளியேறினார்.

அதிரடியாக ஆடிய அலிஸ் கேப்சி 38 பந்துகளில் ஆட்டமிழந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்கள் எடுத்தார். அதன்பின் மரிசான் கேப், ஜெஸ் ஜோனாசன் இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசி ஓவரின் 4வது பந்தில் பவுண்டரி அடித்து ஜோனாசன் வெற்றியை உறுதி செய்தார்.

டெல்லி அணி 2 பந்துகள் மீதமிருந்த நிலையில், 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மரிசான் கேப் 32 ரன்களுடனும், ஜோனாசன் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதை படிக்க :- மூன்று வருடங்களிற்கு பின்னர் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி..! துரதிஷ்டவசமாக இரட்டை சதத்தை தவற விட்டார்..

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *