மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
கேப்டன் மெக் லேனிங் 43 ரன்களும், ஜெமிமா 25 ரன்களும் அடித்தனர். இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. அதிரடியாக ஆடிய யஸ்திகா பாட்டியா 43 ரன்களும், ஹெய்லி மேத்யூஸ் 32 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர்.
PLAY THIS ON LOOP 🔁@JemiRodrigues – A catch marvel 🙌🏻
— Women's Premier League (WPL) (@wplt20) March 9, 2023
Scorecard ▶️ https://t.co/MoIM0uilMQ #TATAWPL | #DCvMI pic.twitter.com/GqjAuHEZ2X
அதன்பின்னர் நாட் ஷிவர் பிரன்ட், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 15வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் நாட் ஷிவர் பிரண்ட் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். நாட் ஷிவர் பிரண்ட் 23 ரன்களுடனும், கேப்டன் கவுர் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஹாட்ரிக் வெற்றி
30 பந்துகள் மீதமிருந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 109 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
இதை படிக்க :- வினோதமான முறையில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய யுவராஜ் – ஹர்பஜன்..! இது போன்று யாரும் கொண்டாட வேண்டாம் என்று எச்சரிக்கை..?