Breaking News

ஆடவர் ஐபில் போட்டிக்கு இணையாக மகளீர் பிரீமியர் லீக் போட்டியில் டெல்லி அணி அபார ஓட்டங்கள் குவித்து சாதனை..!

மகளிர் ஐபிஎல் தொடர் நேற்று கோலாகலமாக தொங்கிய நிலையில், முதல் ஆட்டத்திலேயே மும்பை அணி 207 ரன்கள் குவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது.

இந்த நிலையில், 2வது ஆட்டம் நேற்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதில் நட்சத்திர வீராங்கனைகள் அடங்கிய ஆர்சிபி அணியும், டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சிறந்த ஓப்பனிங்

இதனையடுத்து டெல்லி கேபிட்டல்ஸ் மகளிர் அணியில் ஆஸ்திரேலிய வீராங்கனை மேக் லென்னிங்கும், அண்டர் 19 கேப்டன் செஃபாலி வர்மாவும் பேட்டிங் செய்ய வந்தனர்.ஆடவர்களுக்கு சவால் விடும் வகையில், இவ்விரு வீராங்கனைகளின் பேட்டிங்கும் அமைந்திருந்தது. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி பேட்டர்களும்பந்தை மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்தனர். பவர்பிளேவில் இந்த ஜோடி 57 ரன்கள் சேர்த்தது.

ஓப்பனிங் இறங்கிய இரு வீரர்களும் அரை சதம் அடித்து அசத்தல்

இந்திய வீராங்கனை செஃபாலி வர்மா 31 பந்துகளில் அரைதம் அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். இதே போன்று மேக் லெனிங் 30பந்துகளில் அரைசதம் அடிக்க, இதில் 10 பவுண்டரிகள் அங்கும். ஐபிஎல் தொடரில் முதல் அரைசதம் எடுத்த வெளிநாட்டு வீரர் என் பெருமையை கில்கிறிஸ்ட் பெற்றார்.

இதனால் இந்த ஜோடி 58 பந்துகளில் எல்லாம் சதம் அடித்தது. இதன் மூலம் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதல் 100 ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப் என்ற பெருமையை டெல்லி அணியின் இந்த ஜோடி பெற்றது. ஆடவர் ஐபிஎல்லை பொறுத்தவரை டெல்லி அணியின் ஷிகர் தவானும், கம்பீரும் தான் முதல் முறையாக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

பார்ட்னர்ஷிப் 150 ஓட்டங்களை கடந்த முதல் ஜோடி

இந்த ஜோடி தொடர்ந்து அதிரடி காட்டி முதல் விககெட்டுக்கு 150 ரனகள் சேர்த்தது. மேக் லென்னிங் 43 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சதம் அடிப்பார் என்ற எதிர்பார்க்கப்பட்ட செஃபாலி வர்மா 45 பந்தில் 84 ரன்கள் சேர்த்தார். இதில் 10 பவுண்டரியும், 4 சிக்சர்களும் அடங்கும். இறுதியில் தென்னாப்பிரிக்காவின் கெப் 39 ரன்களும், ஜெமிமா 22 ரன்களும் எடுக்க டெல்லி அணி அதிகபட்ச ஸ்கோராக 223 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் ஹெதர் நைட் 2 விக்கெட்டுகள் வீத்தினார்.

வெற்றி இலக்கு 224 ரன்கள்

இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்த மந்தனா 35 ரன், ஷோபி டெவைன் 14 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து களம் புகுந்த எல்லிஸ் பெர்ரி 31 ரன், திஷா கசட் 9 ரன், ரிச்சா கோஷ் 2 ரன், கனிகா அஹுஜா 0 ரன், ஆஷா ஷோபனா 2 ரன் ஆகியோர் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 96 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

இதற்கிடையில் களம் புகுந்த ஹெதர் நைட் அதிரடியில் மிரட்டினார். அதிரடியில் மிரட்டிய ஹெதர் நைட் 21 பந்தில் 34 ரன் எடுத்திருந்த நிலையில் தாரா நோரிஸ் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

5 விக்கட்டுகளை வீழ்த்திய அமெரிக்க வீரர்

இவரது விக்கெட்டையும் சேர்த்து அமெரிக்காவை சேர்ந்த தாரா நோரிசுக்கு இந்த ஆட்டத்தில் இது 5வது விக்கெட்டாக அமைந்தது. இறுதியில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களே எடுத்தது.

இதன் மூலம் டெல்லி அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி தரப்பில் அமெரிக்காவை சேர்ந்த தாரா நோரிஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதை படிக்க :- கிரிக்கட் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு இவ்வளவு சம்பளமா..? இந்திய வீரர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான்..!

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *