Breaking News

பயிற்சி போட்டியிலேயே பட்டய கிளப்பும் தோனி : அவர் அடித்த ஒரு ஷாட் மிரண்டு போன பவுலர்கள்..!

மார்ச் 31ஆம் தேதி ஐபிஎல் 16 வது சீசனில் முதல் போட்டியில் சிஎஸ்கேவும் குஜராத் அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன. ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பே சிஎஸ்கே அணி தங்களுடைய பயிற்சியை தொடங்கி விட்டது.

நேற்றைக்கு முதல் நாள் சென்னை வந்த தோனி ஓய்வு ஏதும் எடுக்காமல் பயிற்சியை தொடங்கி விட்டார். இந்த நிலையில்,சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மைதானத்தை தயார் செய்யும் பணிகள் இறுதிகட்டம்

ஐபிஎல் தொடருக்கு முன்பு மைதானத்தை தயார் செய்வதற்காக நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். கட்டிட பணிகள் முடிந்து விட்டது, எனினும் மேற்கூரை அமைக்கும் பணிகளும் சில இறுதி கட்டப் பணிகளும் நடக்க உள்ளது. இதனால் மைதானத்திற்கு பார்வையாளர்களை அனுமதிக்கவில்லை.

ஏனென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சி செய்வதைக் காண ரசிகர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் இலவசமாக அனுமதி வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இம்முறை அதற்கான வாய்ப்பு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தோனி தன்னுடைய பேட்டை செங்கோல் போல் எடுத்து வந்து தன்னுடைய கோட்டையான சேப்பாக்கம் மைதானத்திற்குள் வந்தார்.

இதை படிக்க :- முன்னாள் ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்த நாதன் லயன்..!

முதலில் பேட்டிங்கில் சில தடுப்பாட்ட ஷாட்டுகளை ஆடிய தோனி, பிறகு கவர் திசையில் பந்தை அடித்து தன்னுடைய பயிற்சியை தொடங்கினார். அப்போது தோனி அடித்த ஒரு ஷாட்டை பார்த்து அங்கிருந்து அனைவரும் ஒரு நொடி ஆச்சரியத்தில் நின்றனர்.

அணியினை பலப்படுத்தும் தோனி

தீவிர பயிற்சியில் ஈடுபடும் அதேசமயம் அணியை பலப்படுத்தும் பணியையும் செய்கிறார் தோனி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.எனினும் ஸ்டோக்ஸ் அதிகமாக பந்து வீச பயன்படுத்த வேண்டாம் என தோனி முடிவெடுத்துள்ளார்.

இதேபோன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேமிசன் காயம் காரணமாக விலகி உள்ளார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக மாற்றுவீரரை யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நேற்று காலை நடைபெற்றதாக தெரிகிறது .

இலங்கை வீரர் சனாக்காவுக்கு வாய்ப்பு

இதில் இலங்கை அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் சனாக்காவை பயன்படுத்த சிஎஸ்கே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

அண்மையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் சனக்கா அதிரடியாக விளையாடி ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை படிக்க :- “ரோகித் சர்மா எடுத்த முட்டாள்தனமான முடிவே இந்தியா தோற்றதுக்கு காரணம்” – சஞ்சய் மஞ்ரேக்கர் குற்றச்சாட்டு..!

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *