ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உருவாக்கியுள்ள ‘Incredible Premier League awards’ விருதுகள் ரோகித் சர்மா, விராட் கோலி, டிவில்லியரஸ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலகளவில் அதிக புகழ் கொண்ட விளையாட்டு தொடர்களில் ஐபிஎல்-க்கு முக்கிய இடம் உண்டு. ஐபிஎல் தொடர்களை பார்த்து அனைத்து நாடுகளும் இன்று தங்களது உள்நாட்டு தொடர்களை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க :- கிரிக்கட் வீரர் பிரித்வி ஷா தாக்கப்பட்ட வழக்கில் பதிவான இன்ஸ்டாகிராம் பிரபலம் சப்னா கில்லுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்..!
இன்று ஐபிஎல் தொடரின் மதிப்பு பல்லாயிரம் கோடிகளை தாண்டி சென்றுக்கொண்டுள்ளது. இதனால் சர்வதேச கிரிக்கெட் கேலண்டர்களில் ஐபிஎல்-க்கென தனி இடத்தை கேட்டு பெறும் அளவிற்கு பிசிசிஐ உயர்ந்துள்ளது.

இப்படிப்பட்ட ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டு இதே பிப்ரவரி 20ம் தேதியன்று தொடங்கப்பட்டது. இந்த முறை 15வது சீசன் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதற்கான அட்டவணையை தான் பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது.
அதன்படி வரும் மார்ச் 31ம் தேதி போட்டிகள் தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமே பெற்றிருக்கிறது.

இந்நிலையில் இந்த 15 ஆண்டு கால சாதனையை கொண்டாட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், Incredible Premier League awards என்ற பெயரில் விருதுகளை வழங்கியுள்ளது.
சிறந்த கேப்டனுக்கான விருது
அதன்படி சிறந்த கேப்டனாக மும்பை இந்தியன்ஸின் ரோகித் சர்மா தேர்வாகியுள்ளார். 5 முறை கோப்பையை வென்றுக்கொடுத்ததால் தோனியை முந்தி ரோகித் பெற்றிருக்கிறார். தனக்கு முதுகெலும்பாய் இருந்து ஆதரவு தரும் ரசிகர்களுக்கு நன்றி என அவர் கூறியிருக்கிறார்.

சிறந்த பேட்டருக்கான விருது
சிறந்த பேட்டருக்கான விருது ஏபி.டிவில்லியர்ஸுக்கு தரப்பட்டுள்ளது. ஆர்சிபி அணிக்காக அவர் ஆடிய சிறப்பான இன்னிங்ஸை கருத்தில் கொண்டு தந்துள்ளனர். இவருக்கு அடுத்தப்படியாக பட்டியலில் சுரேஷ் ரெய்னாவின் பெயர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறந்த பவுலருக்கான விருது
சிறந்த பவுலராக மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ஒரு சீசனில் சிறந்த பேட்ஸ்மேன் விருது
ஒரு சீசனில் சிறப்பாக செயல்பட்ட பேட்ஸ்மேனாக விராட் கோலி தேர்வாகியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் விராட் கோலி 973 ரன்களை விளாசினார். இதில் 4 சதங்களும் அடங்கும்.

ஒரு சீசனில் சிறந்த பவுலர் விருது
ஒரே சீசனில் சிறப்பாக செயல்பட்ட பவுலராக சுனில் நரேன் தேர்வாகியுள்ளார். 2012ம் ஆண்டு சுனில் நரேன் அறிமுகமான முதல் சீசனிலேயே 15 இன்னிங்ஸ்களில் 24 விக்கெட்களை அள்ளினார். இதனால் கொல்கத்தா தனது முதல் கோப்பையை வென்றது.
இதையும் படிக்க :- டோனியின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா: தான் கேப்டன் பொறுப்பை ஏற்ற பின்னர் தொடர்ச்சியான வெற்றி..!

சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்திய வீரருக்கான விருது
ஒட்டுமொத்தமாக சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் என்ற விருதை வெஸ்ட் இண்டீஸுன் ஆண்ட்ரே ரஸுலுக்கு அறிவித்துள்ளனர். கொல்கத்தா அணிக்காக அவர் ஏற்படுத்திய தாக்கத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் ஷேன் வாட்சன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் புள்ளிகள் வித்தியாசத்தில் ரஸுல் தட்டிச் சென்றுள்ளார்.
