
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்த போட்டியில் செதேஸ்வர் புஜாரா தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலிய அணி, தங்களது வீரர்கள் கையெழுத்திட்ட ஆஸ்திரேலிய ஜெர்சியை புஜாராவுக்கு பரிசளித்தது.
இந்த ஜெர்சியை ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் புஜாராவுக்கு வழங்கினார்.
Spirit of Cricket 👏🏻👏🏻
— BCCI (@BCCI) February 19, 2023
Pat Cummins 🤝 Cheteshwar Pujara
What a special gesture that was! 🇮🇳🇦🇺#TeamIndia | #INDvAUS pic.twitter.com/3MNcxfhoIQ
இந்த புகைப்படத்தை பிசிசிஐ தனது டிவீட்டரில் பகிர்ந்து உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தனது 100-வது டெஸ்டில் விளையாடியதற்காக ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் சேட்டேஷ்வர் புஜாராவுக்கு ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் ஜெர்சியை பரிசாக வழங்கினார்.
இதையும் படிக்க :- சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 25,000 ஓட்டங்களை கடந்து முன்னாள் ஜாம்பவான்களின் சாதனையை ஓரங்கட்டிய கோலி..!
