
டெல்லி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 44 ஓட்டங்கள் எடுத்த விராட் கோலி, இரண்டாவது இன்னிங்சில் 20 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 25,000 ஓட்டங்களை எட்டினார். 549 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம் அவர் இமாலய சாதனையை படைத்தார்.
முன்னாள் ஜாம்பவான்கள்
ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் 577 இன்னிங்சிலும், ரிக்கி பாண்டிங் 588 இன்னிங்சிலும் எட்டிய இந்த சாதனையை கோலி முறியடித்துள்ளார்.


விராட் கோலி 106 டெஸ்ட் போட்டிகளில் 8,195 ஓட்டங்களும், 271 ஒருநாள் போட்டிகளில் 12,809 ஓட்டங்களும் குவித்துள்ளார். அத்துடன் 115 டி20 போட்டிகளில் 4008 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் மொத்தம் 74 சதங்கள் அடங்கும்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இமாலய சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிக்க :- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் இடம் பிடிக்க இந்தியாவுக்கு வாய்ப்பு..! இந்தியாவின் தற்போதைய நிலை என்ன..?