Breaking News

மகளீர் டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா அணி..!

8-வது பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தநிலையில் அந்த அணியின் தஹிலா மெக்ராத் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.

முடிவில், ஆஸ்திரேலியா அணி 16.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பில் அதிகபட்சமாக காப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.

4வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இதையும் படிக்க :- ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 2-வது டெஸ்ட்| இன்று 3-வது நாள் ஆட்டம்..!

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *