Breaking News

டெஸ்டில் முகமது சமி அதிக சிக்சர்கள் விளாசி கோலி உள்பட முன்னணி இந்திய வீரர்களை பின்னுக்கு தள்ளி அவர் முன்னேறி உள்ளார்..!

177 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆஸ்திரேலியா

இ ந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று நடந்த 2-ம் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது.

சதம் கடந்தார் கேப்டன் ரோஹித் சர்மா

கேப்டன் ரோகித் சர்மா 120 ரன்கள் குவித்து அவுட் ஆனார். 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 400 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் அக்சர் படேல் 84 ரன்களும், ஜடேஜா 70 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

2வது இன்னிங்

இதையடுத்து 223 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்சிஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் இன்னிங்சில் பேட்டிங் ஆடிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 47 பந்தில் 37 ரன்கள் குவித்தார். இதில் அவர் 2 பவுண்டரியும், 3 சிக்சரும் பறக்க விட்டார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் பட்டியலில் அவர் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி உள்பட 4 இந்திய வீரர்களை முந்தி உள்ளார்.

ஐந்தாம் இடத்துக்கு முன்னேறிய சமி

கோலி 24, ராகுல் டிராவிட் 21, கேஎல் ராகுல் 17, புஜாரா 15, விவிஎஸ் லஷ்மன் 5 ஆகியோரை பின்னுக்கு தள்ளினார் முகமது சமி. சமி இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 25 சிக்சர்கள் அடித்துள்ளார்.

முதல் நான்கு இடங்களில்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விரேந்தர் சேவாக் (90) முதல் இடத்திலும், எம்.எஸ்.டோனி (78) 2-ம் இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் (69) 3-ம் இடத்திலும், ரோகித் சர்மா (66) 4-ம் இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிக்க :- மகளிர் டி20 உலக கோப்பை – வங்காளதேசம் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை வெற்றி..!

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *