Breaking News

ஐ.பி.எல் 2023 பயிட்சி ஆட்டத்தை ஆரம்பித்த தல தோனி – வைரலாகும் வீடியோ..!

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது இதுவரையில் 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் அடுத்ததாக இந்த ஆண்டு 16-ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தயாராக காத்திருக்கிறது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள இந்த தொடருக்கு முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீரர்களுக்கான மினி ஏலமும் நடைபெற்று முடிந்தது. அதனை தொடர்ந்து தற்போது 10 அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் உறுதி செய்யப்பட்டு இந்த தொடருக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

மேலும் இம்முறை அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானங்களில் விளையாடும் என்பதாலும் இந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது. அதே வேளையில்  வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று முன்னிலையில் இருக்கிறது.

இவ்வேளையில் சென்னை அணியும் இம்முறை கோப்பையை வென்று ஐந்து முறை கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை சமன் செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணியாக பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறையும் பலமான அணியாகவே களமிறங்குகிறது.

அதோடு தோனியின் தலைமையிலேயே இம்முறையும் சி.எஸ்.கே அணி களமிறங்குவதால் அவரது தலைமையில் இந்த தொடரை வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் கடந்த 2020-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு:முரளி விஜய் ஓய்வு பெற்றார்..!

    அந்த வகையில் ஏற்கனவே தனது பயிற்சிகளை மேற்கொண்டு வந்த தோனி தற்போது ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் அகாடமிக்கு சென்று அங்கு தீவிர வலைப் பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். 41 வயதாகும் தோனி இம்முறை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிவிட்டு தான் ஓய்வினை அறிவிப்பேன் என்றும் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

    About admin

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *