Breaking News

ஐ.பி.எல் வரலாற்றின் சுயநலமற்ற வீரர் தோனி தான். முன்னாள் ஜாம்பவான்கள் புகழாரம்..!

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக 16-வது ஐபிஎல் தொடரானது வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்குகிறது. இந்த ஐபிஎல் வரலாற்றில் நான்கு முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் காத்திருக்கிறது.

அதோடு 41 வயதான இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ் தோனி பங்கேற்கும் கடைசி தொடர் இது என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரோடு தோனி ஓய்வு பெற இருப்பதால் இந்த ஐபிஎல் கோப்பையை சி.எஸ்.கே கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் ஐபிஎல் வரலாற்றில் யார் சுயநலமற்ற வீரர்? என்பது குறித்து முன்னாள் ஜாம்பவான்களான அணில் கும்ப்ளே, சுரேஷ் ரெய்னா, கிரிஸ் கெயில் போன்றோர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் பங்கேற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கும்ப்ளே கூறுகையில் : ஐபிஎல் வரலாற்றில் தோனி ஒரு சுயநலமற்ற வீரராக கருதுகிறேன். ஏனெனில் பலரும் ஐபிஎல் தொடரின் கேப்டன் பதவிக்காக ஆசைப்பட்டு வரும் வேளையில் தோனி அந்த பதவியினை தானாக முன்வந்து விட்டுக் கொடுத்தார்.

இப்படி ஒரு வீரர் அணியின் நலனுக்காக முடிவினை எடுப்பது எளிதல்ல எனவே சுயநலமற்ற வீரர் தோனி தான் என்று கும்ப்ளே கூறினார். அதனை தொடர்ந்து பேசிய : ரெய்னா, ஆர்.பி சிங், கிரிஸ் கெயில், ராபின் உத்தப்பா, ஸ்காட் ஸ்டைரிஸ் என அனைவருமே ஐபிஎல் வரலாற்றில் தன்னலமற்ற வீரர் யார் என்ற கேள்விக்கு தங்களது விருப்புப் பெயர்களாக தோனியை தான் தேர்வு செய்தனர்.

இதையும் படிக்க : ஐ.பி.எல் 2023 பயிட்சி ஆட்டத்தை ஆரம்பித்த தல தோனி – வைரலாகும் வீடியோ..!

About admin

2 comments

  1. I’ve been surfing online greater than three hours as of late, yet I never discovered
    any interesting article like yours. It’s lovely price enough for
    me. In my view, if all site owners and bloggers made just right content as you did,
    the web will likely be a lot more helpful than ever before.

  2. Ηi tһere all, һere every one iѕ sharing these kimds օf experience, thuѕ it’s
    pleasant too read this web site, andd I used to
    pay a quick visit tһis web site daily.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *