
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை அஹமதாபாத்தில் தொடங்குகிறது.
இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.கடைசி போட்டியை வெல்லும் அணி தொடரை கைப்பற்றி விடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிராக விளையாடிய மூன்று போட்டிகளில் சுப்மன் கில் 360 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

கில் T20ல் சொதப்பல்
எனினும் டி20 கிரிக்கெட்டில் அதே பார்மை அவர் வெளிப்படுத்த தடுமாறி வருகிறார். முதல் டி20 போட்டிகள் 6 பந்துகளில் 7 ரன் மட்டுமே அடித்த சுப்மன் கில், இரண்டாவது டி20 போட்டியில் 9 பந்துகளை எதிர் கொண்டு 11 ரன்களின் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் சுப்மன் கில், கடைசி போட்டியில் சேர்க்கக்கூடாது என்று முன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஸ்கனரியா தெரிவித்துள்ளார்.

பிரிதிவிஷாவுக்கு வாய்ப்பு கொடுப்பது தான் சரி..!
மேலும் இது குறித்து பேசிய அவர் இதுதான் கடைசி டி20 போட்டி சுப்மன் கில் எப்படி விளையாடுவார் என்று நாம் அனைவருமே பார்த்துவிட்டோம். அப்படி இருக்க பிரிதிவிஷாவுக்கு தான் வாய்ப்பு கொடுப்பது சரியாக இருக்கும். அவர் எப்படி அதிரடியாக ஆடுவார் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இதனால் சுப்மன் கில் இடத்தில் பிரித்வி விளையாடுவது சரியாக இருக்கும்.பிரித்விஷாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால் அவர் நிச்சயம் அதிசயத்தக்க வகையில் விளையாடுவார்.

சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் சரிப்பட்டு வர மாட்டார் என்று நான் கூறவில்லை . அவர் தன்னுடைய திறமையை ஏற்கனவே நிரூபித்து விட்டார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் போது அவருக்கு சில பிரச்சனைகள் இருக்கிறது. அதனை அவர் சரி செய்ய வேண்டும். சுழற் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அவர் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். லக்னோ டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் நிறைய விஷயங்களில் முன்னேற்றம் செய்ய வேண்டிய நிலை இருந்தது.
இஷான் கிஷானிற்கு வாய்ப்பு கொடுப்பாரா ஹர்திக் பாண்டியா..?
ஏனென்றால் இது போன்ற கடினமான ஆடுகளத்தில் எப்போதாவது நாம் விளையாட வேண்டியது இருக்கும். அதற்கு அணிவீரர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். சுப்மன் கில் போன்று இஷான் கிஷன் தொடர்ந்து சொதப்பி வருகிறார். எனினும் அவருக்கு கடைசி டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா வாய்ப்பு வழங்குவார் என எதிர்பார்ககப்படுகிறது.
