Breaking News

ஐசிசி மகளிர் T20பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 2வது இடத்தில் ..!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் மகளிர் முத்தரப்பு T20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மாத்திரமே பெற்று கொண்டது

இந்தியா சார்பில் தீப்தி சர்மா அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் ஆடிய இந்திய அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகி விருதை தீப்தி சர்மா தட்டிச் சென்றார்.

இரண்டாவது இடத்தில்

இந்நிலையில் மகளிர் டி20 போட்டியின் பந்து வீச்சாளர் பட்டியலை இன்று வெளியிடப்பட்டுள்ளது . இதில் 732 புள்ளிகளுடன் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா 2-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான ராஜேஸ்வரி 7 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார்

முதல் இடத்தில்

முதல் இடத்தில் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் உள்ளார்.

பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஓர் இடம் முன்னேறி 13-வது இடத்தில் உள்ளார்.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *