Breaking News

Under19 உலக கோப்பை இந்தியா வசமாகியது ..! கதறி அழுத கேப்டன் ..?

தென் ஆப்பிரிக்காவில் நடந்த U19 உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது.

U19 மகளிர் உலகக்கோப்பை இந்தியா முதன் முறையாக வெற்றி

மகளிர் U19 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. பல போராட்டங்களை கடந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதிக்கொண்டன.

இதில் இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடியது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.1 ஓவரில் 68 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ரையானா 19 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்திய அணியின் சார்பில் டிடாஸ் சாது, அர்ச்சனா தேவி, பர்ஷவி சோப்ரா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. சௌமியா திவாரி, கோன்கடி த்ரிஷா தலா 24 ஓட்டங்கள் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையை U19 மகளிர் இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. பதக்கத்தை பெற்றுவிட்டு ஊடகத்திடம் கருத்து தெரிவிக்க வந்த இந்திய அணியின் கேப்டன் ஷஃபாலி வெர்மா, கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் கதறி அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், ‘சிறப்பான வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். சிறந்த கிரிக்கெட்டை விளையாடியுள்ளனர்.

மேலும் அவர்களின் வெற்றி வரவிருக்கும் பல கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும். குழுவின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *