பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் 2022ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கட் வீரருக்கான சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கிண்ணத்தை வென்றுள்ளார்.
2022ம் ஆண்டு பாபர் அசாம் மிகத்திறமையாக விளையாடி பல்வேறு சாதனையை முறியடித்திருந்தார்.
அவர் கடந்த வருடம் மொத்தமாக 2598 ஓட்டங்களை 54.12 என்ற ஓட்ட சராசரியில் பெற்றார்.
அத்துடன் எட்டு சதங்களையும் 17 அரைச் சதங்களையும் பெற்றுள்ளார்.
இதுவரையில் 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம், 4813 ஓட்டங்களை மொத்தமாக பெற்றிருப்பதுடன், 17 சதங்களையும் 24 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார்.